[Untitled]‎ > ‎

09.12.21- இன்றைய ராசி பலன்..(09.12.2021)

posted Dec 8, 2021, 5:57 PM by Habithas Nadaraja
  • மேஷம்:  குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புதுதொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.


































































































  • ரிஷபம்:தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்குச் சாதகமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புதுமுடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பெரியபொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.












































  • .




































  • மிதுனம்:  புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். ஆன்மிகநாட்டம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.


















































































































  • கடகம்:சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து போகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டிய நாள்.















  • சிம்மம்:பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.





















  • கன்னி:குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.



































































































  • துலாம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

    .

















































































  • .

























  • விருச்சிகம்:  திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


























  • .





































  •  




























  • தனுசு: உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அரசால்ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சிலமாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். முயற்சியால் முன்னேறும் நாள்.






















































































  • மகரம்:  கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.







































































































  • கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல ஒருவித கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் உயர் அதிகாரியைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.










































































































  • மீனம்:அனாவசிய செலவுகளை குறைக்க பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்னசின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர பகை வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.
Comments