10.03.18- இன்றைய ராசி பலன்..(10.03.2019)

posted Mar 9, 2019, 5:38 PM by Habithas Nadaraja


மேஷம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள்  தாமதமாக முடியும்.பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் போராடிலாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சகஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


மிதுனம்:எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நம்பிக் கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும் படி நடந்துக் கொள்வீர்கள். இனிமையான நாள். கடகம்:உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள். சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். கன்னி: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.துலாம்:கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல  செய்தி உண்டு. தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். 


விருச்சிகம்:  குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள். தனுசு:புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து  சேமிக்கத்  தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபா ரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நினைத்ததை முடித்துக்காட்டும் நாள்.மகரம்: எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். நட்பு வட்டம் விரியும். புது வேலைக் கிடைக்கும். தாயாருக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். திடீர் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோ கத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக் கும். உழைப்பால் உயரும் நாள்.கும்பம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத் தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.


                                        
மீனம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தோற்றப் பொலிவுக் கூடும். தடைப்பட்ட வேலைகளை மாறு பட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டு வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டா கும். மகிழ்ச்சி தங்கும் நாள்.
Comments