[Untitled]‎ > ‎

10.03.22- இன்றைய ராசி பலன்..(10.03.2022)

posted Mar 9, 2022, 5:34 PM by Habithas Nadaraja
  • மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை இருந்த குழப்பங்கள் எல்லாம் நீங்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.





























































































































  • ரிஷபம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள் உடனே உணர்ச்சிவசப் படாதிர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.








































































  • .




































  • மிதுனம்:அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.



















































































































































  • கடகம்:  ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். இனிமையான நாள்.





















  • சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களை நம்பிசில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். அந்தஸ்து உயரும் நாள்.































  • கன்னி: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள்  விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர் நண்பர்களின் ஆதரவு கிட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு . உற்சாகமான நாள்.

































































































































  • துலாம்:  சந்திராஷ்டமம் இருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உடல் நலம் பாதிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.













































































































  • .

























  • விருச்சிகம்:உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.






























































  • .





































  •  




























  • தனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.











































































































  • மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.







































































































































  • கும்பம்:எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும் .தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.





































































































































  • மீனம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரங்களால் பயனடைவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.
Comments