posted Apr 9, 2021, 5:41 PM by Habithas Nadaraja
 தனுசு: எதிர்ப்புகள் அடங்கும் .தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். தடைகளைத் தாண்டி வெல்லும் நாள்.
 மகரம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பூர்வீகசொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.
 கும்பம்:கணவன்-மனைவிக்குள்அன்யோன்யம் பிறக்கும். அழகும்இளமையும் கூடும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனசாட்சி படி செயல்பட வேண்டிய நாள்.
 மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் நான்கு ஐந்துவேலைகளை பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
|
|