[Untitled]‎ > ‎

10.05.21- இன்றைய ராசி பலன்..(10.05.2021)

posted May 9, 2021, 6:05 PM by Habithas Nadaraja
  • மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகபழங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.























  • ரிஷபம்:குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டைஅயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில்  மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.























  • மிதுனம்:தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.‌  வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள்.
































  • கடகம்:தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்.  வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.  உத்தியோகத்தில்  முக்கிய முடிவுகள்எடுப்பீர்கள். வெற்றி கிடைக்கும் நாள்.



  • சிம்மம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.  பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.  புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.  புதிய சிந்தனைகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.  அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.




  • கன்னி:சந்திராஷ்டமம் இருப்பதால்  வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள்.  உதவி செய்வதாகவாக்குக் கொடுத்தவர்கள். சிலர் இழுத்தடிப்பார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். லாபம் மந்தமாக இருக்கும்.  உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.






























  • துலாம்:மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும்.  பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.  விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.  வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில்  எண்ணிக்கையை அதிகரிக்கும்.‌  உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை கள் ஏற்கப்படும்‌.  நன்மை கிட்டும் நாள்.





  • .

























  • விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.  பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு‌.‌  உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.  அதிர்ஷ்டமான நாள்.


    .






















  • தனுசு:  புதிய முயற்சிகள் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.  எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில்  எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.




























  • மகரம்: எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பால்ய நண்பர்களின் உதவி கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


    .
































  • கும்பம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள்  தீட்டுவீர்கள்.‌ உத்தியோகத்தில்தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். துணிச்சலுடன் செயல்பட வேண்டிய நாள் . 




























  • மீனம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த திடீர் உதவி கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புது வாய்ப்பு தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.
Comments