[Untitled]‎ > ‎

10.08.16- இன்றைய ராசி பலன்(10.08.2016)

posted Aug 9, 2016, 5:06 PM by Habithas Nadaraja   [ updated Aug 9, 2016, 5:07 PM ]
மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். புது நட்பு  மலரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்: இதமாக  பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் பெரிய  நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்ட காரியம் துலங்கும் நாள்.  


மிதுனம்:  குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வேற்றுமதத்தவர்  உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கனவு நனவாகும் நாள். 


கடகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள்  மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள். 


சிம்மம்:  உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவி
யில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக  முடிப்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். 


கன்னி: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். சொந்த-பந்தங்களின்  சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். மனநிறைவு கிட்டும் நாள். 


துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். யாரையும் தூக்கி எறிந்துப்  பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.   


விருச்சிகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட  வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.  


தனுசு: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள்.  பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள்  வெளிப்படும். சிறப்பான நாள். 


மகரம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் புது  ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.
 
கும்பம்:  குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். விருந்தினர்களின்  வருகையால் வீடுகளைகட்டும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக்  கிட்டும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.  
 
மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு  ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சிந்தித்து  செயல்பட வேண்டிய நாள்.




Comments