10.08.18- இன்றைய ராசி பலன்..(10.08.2018)

posted Aug 9, 2018, 6:31 PM by Habithas Nadarajaமேஷம்:பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துச் செல்லும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.  ரிஷபம்:துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள். மிதுனம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.  கடகம்:ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். வேலைச்சுமை மிகுந்த நாள்.  


சிம்மம்:பல வேலைகள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பற்றி குறைக் கூற வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.  


கன்னி: எதிர்பார்ப்புகள் யாவும் வெற்றியடையும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். புகழ், கௌரவம் கூடும் நாள். துலாம்:உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவு நீங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.
தனுசு:சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் உங்கள் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

மகரம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஆதரவுக் கிட்டும். திறமைகள் வெளிப்படும் நாள். 


கும்பம்:குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். 


                                        

மீனம்:புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.
Comments