[Untitled]‎ > ‎

10.12.17- இன்றைய ராசி பலன்..(10.12.2017)

posted Dec 9, 2017, 5:40 PM by Habithas Nadaraja




மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புதியவரின் நட்பால் ஆதாய மடைவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.







ரிஷபம்:தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வரக் கூடும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்த ரவு குறையும். உழைப்பால் உயரும் நாள்.







மிதுனம்:குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்ட றிந்து பூர்த்தி செய்வீர்கள். உங்களை  புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். தைரியம் கூடும் நாள்.







கடகம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். மாறுபட்ட அணுகு முறை யால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் நண்பர் களாவார்கள். நவீன சாதனங்கள் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உற்சாகமான நாள்.







சிம்மம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலை களை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பூரம் நட்சத்திரக்காரர்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். செலவினங்கள் அதிகரிக்கும் நாள்.







கன்னி:கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண் டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.







துலாம்:குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நெருங்கிய நண்பரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கடையை மாற்றுவது குறித்து ஆலோசிப்பீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.







விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளை புதிய பாதை யில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியா பாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.







தனுசு:குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். உறவினர் களால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். திடீர் நன்மைகள் உண்டாகும் நாள்.







மகரம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் கொஞ்சம் அலைச் சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.







கும்பம்:பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றி யடையும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.






                                        

மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுவலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். அமோகமான நாள்.

Comments