[Untitled]‎ > ‎

10.12.20- இன்றைய ராசி பலன்..(10.12.2020)

posted Dec 9, 2020, 5:49 PM by Habithas Nadaraja


மேஷம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இராட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சவலான வேலைகளையும் சாதாரனமாக முடிப்பீர்கள்.திடீர் யோகம் கிட்டும் நாள்.





 
ரிஷபம்:குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.




மிதுனம்:திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.




கடகம்:
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.



சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கி, மகிழ்ச்சி பொங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.






கன்னி:
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.





துலாம்:கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. அநாவசிய செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.


விருச்சிகம்: உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ் கூடும் நாள்.


தனுசு: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள் .



மகரம்: இதுவரை இருந்த அசதி சோர்வு நீங்கி குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள்.


கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னைவரக்கூடும்.  முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.



                                        
மீனம்:  உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

Comments