[Untitled]‎ > ‎

10.12.21- இன்றைய ராசி பலன்..(10.12.2021)

posted Dec 9, 2021, 6:07 PM by Habithas Nadaraja
  • மேஷம்:  தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மதிப்புக் கூடும் நாள்.



































































































  • ரிஷபம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். கடமையுணர்வுடன் செயல்படும் நாள்.













































  • .




































  • மிதுனம்:  குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன விஷயங்கள் முடியும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாற்றம் ஏற்படும் நாள்.



















































































































  • கடகம்:சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள்.  வியாபாரத்தில் வேலையாட்களால் சின்ன சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். விழிப்புடன் இருக்கவேண்டிய நாள்.















  • சிம்மம்:உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.





















  • கன்னி:ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். வியாபாரத்தில் ராஜதந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.



































































































  • துலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.


    .

















































































  • .

























  • விருச்சிகம்:  எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி உதவுவார். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் வேலைகள் விரைந்து முடியும். நன்மை கிட்டும் நாள்.



























  • .





































  •  




























  • தனுசு:குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக் கட்டும். வியாபாரத்தில்  புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நல்லன நடக்கும் நாள்.























































































  • மகரம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.






































































































  • கும்பம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.










































































































  • மீனம்:விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து போங்கள். பொறுமை தேவைப்படும் நாள்.
Comments