11.01.19- இன்றைய ராசி பலன்..(11.01.2019)

posted Jan 11, 2019, 7:23 PM by Habithas Nadarajaமேஷம்: உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மாலை நேரத்தில் சிறுவயது நண்பர்களைச் உண்டாகும். மகிழும் வாய்ப்பு ஏற்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும். 


ரிஷபம்:முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாலையில் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு அமையும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. 


மிதுனம்:காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். 


கடகம்: தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் நண்பர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசாங்கக் காரியங்களை முற்பகலுக்குள் முடித்துக்கொள்வது நல்லது. 


சிம்மம்: புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படக்கூடும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் மட்டும் இன்றைக்கு வேண்டாம். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.


கன்னி: இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும். 


துலாம்:மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு தருவார். சிலருக்கு வாகன யோகம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் உண்டாகும். 


விருச்சிகம்:  புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். 


தனுசு: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சகோதரர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். மாலையில் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.


மகரம்:மனம் உற்சாகமாக இருக்கும். குருவருளால் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.கும்பம்:வெளியூர்களிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். 

                                        
மீனம்: தாயிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் செலவுகள் ஏற்படுவதன் காரணமாக சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும். வாழ்க்கைத்துணை வழியில் சிறுசிறு சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

Comments