[Untitled]‎ > ‎

11.03.18- இன்றைய ராசி பலன்..(11.03.2018)

posted Mar 10, 2018, 7:40 PM by Habithas Nadaraja




மேஷம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.  வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை  வாங்குவீர்கள். மகிழ்ச்சியான நாள். 







ரிஷபம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என  ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.







மிதுனம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சாரப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால்  மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 
   






கடகம்:சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த  இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  அமோகமான நாள்.  







சிம்மம்:குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில்  புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். கனவு நனவாகும் நாள். 







கன்னி:முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். புது வேலை கிடைக்கும். பழைய கடனைப் பற்றி  அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 







துலாம்:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சொத்து  வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். தைரியம் கூடும் நாள்.







விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில்  ஒன்று தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். தடைகள் உடைபடும் நாள். 







தனுசு:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் அதிகமாகும். நீங்கள் எதைப்  பேசினாலும் அதை எல்லோரும் தவறாக புரிந்துக் கொள்வார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட  வேண்டிய நாள். 







மகரம்:கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.  யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.  







கும்பம்:குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். விருந்தினர் வருகை  அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். இனிமையான நாள்.  






                                        

மீனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வீடு, வாகனத்தை  சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும்  நாள்.
Comments