மேஷம்: காலை 11 மணி முதல் சந்திராஷ்டமம் தொட ங்குவதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
ரிஷபம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்-. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலி தமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.
மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண் பர்கள் உங்களை கலந்தாலோ சித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபா ரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.
கடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை கள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.
சிம்மம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். தாயாருடன் கருத்து மோதல் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
கன்னி: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந் தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
துலாம்:காலை 11 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவ சரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவு வார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
விருச்சிகம்: காலை 11 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்ப த்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள் ளாதீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
தனுசு: கணவன்-மனைவிக் குள் வாக்குவாதம் வந்து போகும். யாரையும் பகைத் துக் கொள்ளாதீர்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரும். போராடி வெல்லும் நாள்.
மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சகோ தர வகையில் நன்மை உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியா பாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.
கும்பம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்தி றமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.
மீனம்: காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் குழ ப்பம் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.