11.05.20- இன்றைய ராசி பலன்..(11.05.2020)

posted May 10, 2020, 6:29 PM by Habithas Nadaraja


மேஷம்:கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். வீடு வாகனத்தைசீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.


 
ரிஷபம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங் கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். தடைப்பட்டவேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். பொறுமை தேவைப் படும் நாள்.மிதுனம்:கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உத்தியோ கத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நல்லன நடக்கும் நாள். கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் உயரதி காரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.சிம்மம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையான வர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.கன்னி:
சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்லவரன் அமையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.துலாம்:குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலை மைக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.விருச்சிகம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டிற்கு தேவையானபொருட்களை வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி கிட்டும் நாள்.


தனுசு:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப் பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களை உங்களுடன் ஒப்பிட்டு  கொண்டிருக்க  வேண்டாம்.உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் எதிலும் கவனம் தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.


மகரம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. முக்கிய கோப்புகளை அலட்சி யமாக கையாள வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நிதானம் தேவைப்படும் நாள்.கும்பம்: சமயோசிதமாகவும், சாதுரியமாகவும், பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். இனிமையான நாள்.


                                        
மீனம்:பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ் வீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர் களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
Comments