11.06.20- இன்றைய ராசி பலன்..(11.06.2020)

posted Jun 10, 2020, 6:40 PM by Habithas Nadaraja


மேஷம்:அலுவலகத்தில் இருந்த வேலைப்பளு குறையும். வியாபாரத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். பெண்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும்.






 
ரிஷபம்:புதிய முயற்சிகள் காலதாமதமின்றி முடியும். கடந்த சில நாட்களாக இருந்த தாயின் உடல் உபாதைகள் நீங்கும். சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினரிடம் நிதானமாக பேசினால் பிரச்னைகளிலிருந்து மீளலாம்.







மிதுனம்:வியாபார சம்பந்தமான பேச்சுவார்த்தையின் போது உங்களின் அனுபவ அறிவு வெளிப்படும். வீடு கட்டுவதற்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன், மனைவி இடையே நெருக்கம் கூடும். அக்கம் பக்கத்தினருக்கு ஆதரவாக இருப்பீர்கள்.







 கடகம்:சகஊழியர்களுடன் வாக்குவாதத்தை தவிர்த்தால் மனஉளைச்சலில் இருந்து விடுபடலாம். பெண்களுக்கு வீண் அலைச்சல் இருக்கக்கூடும். மாணவர்கள் சிலர் வாழ்க்கைக்கு தேவையான சில நல்ல புத்தகங்களை படித்து புதுவித அனுபவத்தை பெறுவர்.







சிம்மம்:உங்கள் மீது மேலதிகாரி கோபப்பட முடியாத அளவு நடந்து கொள்வீர்கள். பெண்களுக்கு இருந்து வந்த மனக்கவலை குறையும். வியாபாரிகளுக்குப் பணவரவு சீராக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கடந்த நாட்களில் இருந்த வீண்பழி நீங்கும்.







கன்னி:
குடும்பத்தில் இருந்த சில்லறை சண்டைகள் சரியாகும். தொழில், வியாபாரத்தில் பணம் வருவது தடைபடாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறைவதால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைத்து நிம்மதி அடைவீர்கள்.







துலாம்:பெண்களுக்கு அக்கம் பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாபதபடி சில சிரமங்கள் ஏற்படக்கூடும். கலைத்துறையினர் மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.







விருச்சிகம்: கணவன், மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய திட்டங்கள் உருவாகும். அலுவலககத்தில் சகஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பணப்புழக்கம் அதிகரிப்பதால் பழைய கடன்களை அடைப்பீர்கள்.







தனுசு:கணவருக்கு பணவரவு திருப்தி தரும். பேச்சினால் அலுவலகத்தில் பாராட்டுப் பெறுவீர்கள். வயிறு சம்பந்தமான சிறு பிரச்னைகள் வந்து சரியாகும். சகோதர, சகோதரியின் பொருளாதார பிரச்னைகளை சரிசெய்வீர்கள். சுபச்செலவுகள் ஏற்படும்.







மகரம்:வாழ்க்கைத் துணைவரின் மூலம் நன்மை கிடைக்கும். பெண்களுக்கு மனதில் இருந்த பயங்களும், குழப்பமும் நீங்கும். பணியாளர்கள் மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் மனம் மாறுவார்கள்.







கும்பம்:பெண்களுக்கு வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். வீடு, வாகன பராமரிப்பைப் பல காலத்துக்குப் பிறகு வெற்றிகரமாகச் செய்வீர்கள். வியாபாரிகளின் செயல்பாடுகளில் ஒருவித பதற்றம் காணப்படும். அலுவலக பணியாளர்களின் வெற்றி தாமதப்படும்.






                                        
மீனம்:எந்தநேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பதை யோசித்துப் பேசுங்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல மனிதர்களை சந்திப்பீர்கள். பணியாளர்களின் தேவையற்ற கற்பனை பயங்களால் வேலையில் கவனம் குறையக்கூடும்.
Comments