11.08.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் (11.08.2014 -17.08.2014)

posted Aug 11, 2014, 9:58 AM by Unknown user
   மேஷம்

1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்11,12அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.ஒரு சிலருக்கு உற்றார் மற்றும் உறவினர்களால் எதிர் பாராத ஆதாயங்களை அடைவீர்கள். படித்த வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும்.ஆகஸ்ட்13,14,15,16பொதுத் தொண்டுகளைச் செய்வோர்கள், திருமணத் தகவல் மையங்களை நடத்துபவர்கள்,சினமா நாடகம் போன்ற கலைத் துறைகளை சார்ந்தவர்கள்,கலைக்கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள்,ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்கி விற்பனை செய்வோர்கள்,கட்டிட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் மிகவும் நற் பலன் அடைவார்கள். விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயங்களின் மூலமாக நல்ல லாபம் பெறுவார்கள். புதிய ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்குவதைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது.திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப கிடைக்கும்.பொது நலச் சேவைகளைச் செய்வோர்கள் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.ஆகஸ்ட்17ரேஸ் லாட்டரி போன்ற சூதாட்ட விசயங்களில் பணம் வந்து சேரும் என எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம்.காதல் விசயங்களில் எதிர் பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். ரேஸ் லாட்டரி போன்ற சூதாட்ட விசயங்களுக்காக பணம் பொருட்களை ஏமாறாமல் இருக்கவும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம் வெள்ளிக் கிழமையில் மஹா லட்சுமி வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

      ரிசபம்

2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்11,12,13முதியோர் இல்லம் நடத்துபவர்கள்,நீர் வளத் துறை சார்ந்தவர்கள்,உப்பு வியாபாரிகள் கடல்துறை சார்ந்த அறிஞர்கள்,தண்ணீர் மற்றும் குளிர் பான வியாபாரிகள்,பூஜைப் பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவீர்கள்.மன தைரியமுடன் எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்க வாய்ப்பு உள்ள காலமாகும். காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.ஆகஸ்ட்14,15நண்பர்களால் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் கவனமுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும். தாயின் உடல் நிலையில் இருந்து வந்துள்ள பாதிப்புகள் குறைந்து மனநிம்மதி அடைவீர்கள்.பொருளாதாரத்தில் சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். காதல் சம்பந்தமான விசயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். தாயின் உடல் நிலையில் வெகு நாட்களாக இருந்து வந்துள்ள உடல் நிலை பாதிப்புகள் குறைந்து காணப்படும்.ஆகஸ்ட்16,17 கணவன் மனைவிக்குள் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து போகும்.பிரிந்துபோன உறவுகளுடன் திரும்பவும் தொடர்புகள் ஏற்படக் கூடிய காலமாகும். சகோதர சகோதரர்களின் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். புதிய கடன் வாங்கினால் திரும்பி செலுத்த இயலாமற் போகுமாகையால் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும். 

    மிதுனம்

3.மிதுனம்;-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்11பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள்.வீடு வாகனங்களைப் பழுது பார்ஹ்தன் மூலமாகப் பொருட் செலவுகள் உண்டாகலாம்.உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம்.தீராத நாட் பட்ட நோய்கள் தீர்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள்.ஆகஸ்ட்12,13,14ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் வீண் பிரச்சனைகள் உருவாகி பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.தீராத நாட் பட்ட நோய்கள் தீருவதற்காக புதிய மருத்துவர்களை நாடுவது நல்லது.காரணமற்ற மனசஞ்சலங்கள் வர இருப்பதால் புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பது உகந்ததாகும். ஆகஸ்ட்15,16,17புதிய கடன் வாங்கி பழைய கடன்கள் அடைப்பதற்காக முயற்சிப்பீர்கள்.
வேற்று மதத்தவர்களால் எதிர் பார்த்து ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளைத் தள்ளிப் போடவும். காய்கறிகள் இலை பூ பழம் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள்,சிறு தின்பண்ட வியாபாரிகள்,மருத்துவ துறையை சார்ந்தவர்கள்,
எழுத்தாளர்கள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள்,தபால் தந்தித் துறையினர்கள், கவிஞர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
புரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவி~;ணு ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

     கடகம்

4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்..ஆகஸ்ட்11,12சகோதர சகோதரிகளின் தடை பட்ட திருமண காரியங்கள் மற்றவர்களின் உதவியால் நிறை வேறும் காலமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வெகு காலமாக எதிர் பார்த்து இருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய வீடுகள் மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.ஆகஸ்ட்13,14,15.16; வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் வேற்று மதத்தினர்களிடம் இருந்து எதிர் பார்த்த செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம். உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும்.ஒரு சிலருக்கு பணி செய்யும் இடங்கள் மற்றும் வீடுகளை இட மாற்றம் செய்வீர்கள். கட்டிட சம்பந்தமான செங்கல் மணல் மண் சிமிண்ட் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,அழகு கலைக் கூடங்களை நடத்துபவர்கள்,நடிப்பு துறையை சார்ந்தவர்கள், நறுமணப் பொருள்களாகிய ஊதுபத்தி, சந்தணம், அத்தர் சவ்வாது செண்ட், விபூதி குங்குமம் போன்ற பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.ஆகஸ்ட்17 பொது நலத் தொண்டுகளில் மிகவும் பிரியமுடன் ஈடு பட்டு நற்பெயர் புகழ் அடைய வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும் காலமாகும்.
நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த வங்கிக் கடன்கள் கை வந்து சேரும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹா லட்சுமி ஆலய வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

    சிம்மம்

5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்கிரன்; நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்11,12குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடவும். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்பி வரக் கூடிய காலமாகும்.வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும்.நீண்ட காலமாக பிள்ளை இல்லாதவர்களுக்கு இறையருளால் புத்திர பாக்கியம் உண்டாகும்.ஆகஸ்ட்13,14அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுவதால் வர இருக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். உத்தியோகம் இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தந்தையின் உடல் நிலையில் ஏற்பட்டு இருந்த பாதிப்புகள் சற்று குறைவதன் மூலம் மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. வீடு மற்றும் தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு வீடு மற்றும் பணி இட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஆகஸ்ட்15,16,17மனைவிக்கு திடீரென நோய் வாய்ப்பட்டு மருத்துவச் செலவுகள் வந்து சேர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். பொதுத் தொண்டுகள் மற்றும் அநாதை இல்லங்களை நடத்துபவர்களுக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும்.விளையாட்டு; துறை சார்ந்தவர்கள் பரிசு மற்றும் பாராட்டுதல்களோடு அரசு ஆதரவுகளையும் பெறுவார்கள்.கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். தண்ணீர்கூல்டிரிங்ஸ் மற்றும் திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,உப்பு உர வியாபாரிகள்,கப்பல் பணி செய்வோர்கள்,சுவாமி படங்கள்,பூஜை சம்ப்நமான பொருட்களின் வியாபாரிகள்,நீர்வளத்துறை சார்ந்த அரசு அதிகாரிகள்,மீன் பிடித் தொழிற் செய்வோர்கள்,
தாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்
கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-2;
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

      கன்னி

6.கன்னி:-கன்னராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்..ஆகஸ்ட்11,12,13ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாக திடீர் தன வரவுகள் உண்டாகும்.யாத்திரையில் மிகுந்த கவனமுடன் சென்று வரவும்.முன் கோபம் தவிர்த்தல் நல்லது.ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாகவோ அல்லது செய் தொழிலிலோ திடீர் இதிர்~;டம் மூலமாகப் பணம் வந்து சேர வாய்ப்பு உள்ளது.வெளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயமும் நற் செய்திகளும் வந்து சேரும்.ஆகஸ்ட்14,15இரும்பு இயந்திரம் இரசாயன சம்பந்தமான தொழிற் செய்வோர்கள், பெட்ரோல் டீசல் நிலக்கரி போன்ற எரி பொருட்களின் வியாபாரிகள், பழைய பொருட்களை விற்பனை செய்வோர்கள்,பலசரக்கு வியாபாரிகள்,வட்டித் தொழிற் செய்வோர்கள்,தரகு மற்றும் ஏஜன்சி குத்தகை போன்ற தொழில்களை செய்வோர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள்.உடம்பில் கண் காது தலை போன்ற பாகங்களில் சிற் சில உபாதைகள் வருவதன் மூலம் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.ஆகஸ்ட்.16,17குடும்பச் சொத்துக்களில் வெகு காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் திரும்ப கிடைக்கும். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். புதிய ஆடை அணி கலன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் உண்டாகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
புரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் காளி மற்றும் பிதுர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

    துலாம்

7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்11;,12விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான நற்பலனையே செய்யும். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்..மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவதோடு புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்படும். உடல் நிலையில் வாயு மற்றும் வாத சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.ஆகஸ்ட்13,14,15மின்சாரம், இராணுவம், எரி பொருட்கள், காவல் துறையைச் சார்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,சிற்
றுண்டி உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,தரகு கமிசன் போன்ற தொழிற் செய்வோர்கள்,பூமி நில புலன்கள் விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். ஆடம்பரச் செலவுகளைச் செய்ய எண்ணி புதிய கடன்கள் வாங்குவீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டு; தொழிற் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல பலன்களை எதிர் பார்க்கலாம்..ஆகஸ்ட்16,17தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்துள்ள பிரச்னைகள் குறைந்த ஒற்றுமை உண்டாகும்.புதிய ஆடைகள் மற்றும் அணிகலன்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ள காலமாகும்.புதிய நண்பர்களின் சேர்க்கையை தவிர்த்தல் நல்லது.பழுது பட்ட பழைய வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காக பொருட் செலவுகள் வந்து சேரும். வெளி நாடுகளில் வசிப்பவர்கள் தங்களது தாய்நாடு சென்று திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம் செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

விருச்சிகம்

8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்.11,12,13பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்பட்டு விலகும்.காதல் சம்பந்தமான விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும்.தன்னிடம் பணி செய்யும் அடிமை ஆட்களால் பிரச்சனைகளும் பொருள் இழப்பும் வர இருப்பதால் கவனம் தேவை.திடீர் அதிர்~;டமாகிய ரேஸ் லாட்டரி மற்றும் சேர் மார்க்கெட் தொழிலில் ஈடு படுவோர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.ஆகஸ்ட்14,15 பொதுத் தொண்டு நிறுவனத்தவர்கள், திருமணத் தகவல் மையங்கள் நடத்துபவர்கள்,
ஆலயப் பணி செய்வோர்கள்,அற நிலையத் துறை சார்ந்தவர்கள், தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள், கம்யூட்டர் துறை சார்ந்தவர்கள், இனிப்புப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,பூ பழம் மற்றும் நறுமண சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். நீண்ட நாட்களாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் பொருட்கள் திரும்பக் கை வந்து சேரும்.ஆகஸ்ட்16,17மாணவர்கள் கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவதோடு அரசு உதவித் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.தரகு மற்றும் கமிசன் தொழிற் செய்வோர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லதாகும். பெண்களால் தென்திசையில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் ஒன்று சேருவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

       தனுசு

9.தனுசு:-தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்11,12,13புதிய வீடு நிலம் மற்றும் வாகனங்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம்.விட்டுப் போன பழைய உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து நல்ல சூழ்நிலை உருவாகும்.இரும்பு இயந்திரம் எண்ணை,பலசரக்கு மாமிசப் பொருட்கள் ஆகியன உற்பத்தி விற்பனை செய்வோர்கள்,ஆலை அதிபர்கள், இன்சினியரிங் துறையை சார்ந்தவர்கள்,பழைய பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். ஆகஸ்ட்14,15நண்பர்களின் வீட்டு சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் சம்பந்தமான விசயங்களில் உறவினர்களின் மூலமான நல்ல செய்திகள் வந்து சேரும். அரசியல் வாதிகளுக்கு எதிர் பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டி வரும் என்பதால் புதிய தொடர்புகளை தவிர்த்தல் நல்லது.ஆகஸ்ட்16,17உத்தியோக துறையினர்களுக்கு மேலதிகாரிகளிடம் மனக் கசப்புகள் ஏற்பட்டு பணி இட மாற்றம் ஏற்பட இருப்தால் முன் கோபத்தை தவிர்த்துப் பணி ஆற்றுதல் சிறந்ததாகும்.பெண்களால் தென்திசையில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். யாத்திரையில் எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லது. வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

     மகரம்

10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்..ஆகஸ்ட்11,12குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலம் மன திருப்தி அடைவீர்கள்.உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் எதிர் பாராத பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவுகள் ஏற்படலாம்.விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும் காலமாகும்.வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.ஆகஸ்ட்13,14பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவதற்காக எதிர் பார்த்த வங்கிக் கடன்கள் கை வந்து சேரும். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்றுமுன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். வட திசையில் இருந்து நற் செய்திகள் வந்து சேரும். வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்து கடன் உதவித் தொகைகள் நண்பர்களின் உதவியால் கிடைக்கும்.ஆகஸ்ட்15,16,17பழைய இரும்பு இயந்திரம் இரசாயனம் போன்ற துறை சார்ந்தவர்கள், அணு ஆராய்ச்சித் துறையில் பணி ஆற்றுபவர்கள்,அரசியல் அறிஞர்கள்,மீன் முட்டை மாமிசம் போன்ற உணவு பொருட்களின் வியாபாரிகள்,கம்யுட்டர் மற்றும் நாடகத் துறையைச் சார்ந்தவர்கள்,அடிமைத் தொழிற் செய்வோர்கள்,ஆலைப் பணியாளர்கள் ஆகியோர்கள் நற் பலன்; அடைவார்கள்.தொழிற் சாலை மற்றும் வீடுகளை மாற்றம் செய்ய எண்ணுவீர்கள்.

யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வருவது சிறந்ததாகும். விபரீதமான எண்ணங்களை கை விட்டுக் காரியத்தில் கவனமாய் இருப்பது நல்லது. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் ஆஞ்சனேயர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.


   கும்பம்

11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்.11வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து வந்த பண உதவித் தொகைகள் கிடைக்கும். காதல் சம்பந்தமான விசயங்களில் மிகுந்த கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.திருமண சம்பந்தமான முயற்சிகளை இன்னும் சற்று கால தாமதமாகவே நடத்துவது சிறந்ததாகும்.ஆகஸ்ட்12,13,14பூர்வீக சம்பந்தமான சொத்துக்

களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். மாணவர்களுக்கு புதிய படிப்புகள் சம்பந்தமாக நல்ல தகவல்கள் கிடைக்கும். மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,அணு ஆராய்ச்சி துறைகளைச் சார்ந்தவர்கள்,மடாதிபதிகள், துறவிகள்,கழிவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன்கள் அடைவார்கள்.ஆகஸ்ட்15,16,17உடல் நிலையில் சுரம் மற்றும் உ~;ண சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.கண் காதுகளில் கவனம் தேவை..தடை பட்டுப் போன சகோதர சகோதரிகளின் சுப காரிய சம்பந்தமாக நல்ல தகவல்கள் வந்து சேரும். வராத பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வீடு மற்றும் நில புலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள்.புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகளை சற்று தள்ளிப் போடுதல் நல்லது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் விநாயகர் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.


      மீனம்


12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்..ஆகஸ்ட்11,12வேலையாட்களால் எதிர் பார்த்த ஆதாயம் இல்லை. யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களுடைய தொடர்புகளால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்.பூர்வீகச் சொத்து விசயங்களில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண காரியங்கள் நிறைவேறும்.ஆகஸ்ட்13,14,15விடு பட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. அரசுத்துறை சார்ந்த உயர் பதவிகள் வகிப்பவர்கள் ஜவுளி நூல் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,மருந்துப் பொருள்களின் வியாபாரிகள்,மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் இவைகளில் பணி புரியும் ஆசிரியர்கள்,விசைத் தறி தொழிலாளர்கள் ஆகியோர்
கள் நற் பலன்களை அடைவார்கள்.ஆகஸ்ட்16,17தேவையற்ற மன சஞ்சலங்களைத் தவிர்க்கவும்.தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் வரக் கூடுமாகையால் கவனமுடன் இருக்கவும்.குல தெய்வ வழிபாடுகளை செய்து வருவது நல்லது.உற்றார் மற்றும் உறவினர்களால் எந்த விதமான ஆதாயமும் இல்லை.கோர்ட் சம்பந்தமான வழக்கு விசயங்களில் எதிர் பாரத்த சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்..

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-ஞயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும். 
தொடரும்!
 நன்றி : ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி  IBAM, RMP,DISM
        தமிழ்நாடு, இந்தியா

 

Comments