11.08.16- இன்றைய ராசி பலன் (11.08.2016)..

posted Aug 10, 2016, 6:23 PM by Habithas Nadaraja
மேஷம்: காலை 11.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.


சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். தாயாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் வந்துப் போகும். பயணங்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.


கன்னி: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். தைரியம் கூடும் நாள்.


துலாம்: காலை 11.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


விருச்சிகம்: காலை 11.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மற்றவர்களை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


தனுசு: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


மகரம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலைக் கிடைக்கும். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள். 


கும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.


மீனம்: காலை 11.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருக்கும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.




Comments