11.12.17- இன்றைய ராசி பலன்..(11.12.2017)

posted Dec 10, 2017, 5:46 PM by Habithas Nadaraja
மேஷம்: எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.ரிஷபம்:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.மிதுனம்:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.கடகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நினைத்ததை முடிக்கும் நாள்.சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மகிழ்ச்சி தங்கும் நாள்.கன்னி:ராசிக்குள் சந்திரன் நுழைவதால் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

துலாம்:சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

விருச்சிகம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. வி.ஐ.பிகளால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.தனுசு:உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.மகரம்:கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். கோபம் விலகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். நிம்மதியான நாள்.கும்பம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

                                        

மீனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
Comments