11.12.19- இன்றைய ராசி பலன்..(11.12.2019)

posted Dec 10, 2019, 8:14 PM by Habithas Nadaraja


மேஷம்: கணவன் மனைவிக்குள், அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரிமையைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.ரிஷபம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால், விமர்சனங்களுக்கும், கேலி பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும், மற்றவர்களிடம் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவையாக சொல்லக்கூடிய விஷயங்கள் கூட சீரியசாக வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


மிதுனம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டியது வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வாகனத்தில் அடிக்கடி தொந்தரவு ஏற்படும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளைத்தாண்டி முன்னேறும் நாள்.


கடகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அனைத்துக் காரியங்களிலும் வெற்றியடைவீர்கள். பெற்றோர் நண்பர்களின் விருப் பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கிய உறவுகளுக்காக மற்றவரின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின், எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.


சிம்மம்:உங்களின் அணுகு முறையை மற்றவரின் வசதிக் கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.கன்னி:கணவன் மனைவிக்குள் அன்னோயம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தி யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.துலாம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். நயமாக பேசுபவர்களை நம்ப வேண்டாம். உத்தி யோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


விருச்சிகம்:கடினமான காரியங்களையும், எளிதாக முடிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும் . வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


தனுசு:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத தனவரவு உண்டு. உறவினர்கள் , நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி, மூத்த அதிகாரி சில பொறுப்புக்களை ஒப்படைப்பார். அமைதியான நாள்.மகரம்:குடும்பத்தில் உங்கள் கைஓங்கும். சிக்கனமாக செலவுசெய்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.கும்பம்:எதிர்ப்புக்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமை யும். கலைப்பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரரின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


                                        
மீனம்:குடும்பத்தாருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள் வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவதும், விற்பதும் லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். நயமாக பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக முடிவெடுக்கும் நாள்.
Comments