12.01.19- இன்றைய ராசி பலன்..(12.01.2019)

posted Jan 11, 2019, 7:28 PM by Habithas Nadarajaமேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். முக்கிய கோப்பு களை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும். வியா பாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.    
      


ரிஷபம்:பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சி களை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.  மிதுனம்:புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார் கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதித்துக் காட்டும் நாள். கடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். உறவினர் கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். மகிழ்ச்சியான நாள்.   சிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவு கள் எடுக்க வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.   கன்னி: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.  துலாம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திடீர் யோகம் கிட்டும் நாள். விருச்சிகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள். தனுசு:பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். புது வேலை அமையும். பணப் பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள். மகரம்:துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.கும்பம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். முகப்பொலிவுக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உடல் நலம் சீராகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். 


                                        
மீனம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.
Comments