12.02.22- இன்றைய ராசி பலன்..(12.02.2022)

posted Feb 11, 2022, 7:47 PM by Habithas Nadaraja
  • மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.























































































































  • ரிஷபம்: குடும்பத்தில்  கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம்உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.  மகிழ்ச்சி தொடங்கும் நாள்.



































































  • .




































  • மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில்நிறுத்துங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும்.வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும்.பொறுமைத் தேவைப்படும் நாள்.‌











































































































































  • கடகம்: 
    அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு . வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள்.  அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.



















  • சிம்மம்: எதார்த்தமாக பேசிக்கவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.





























  • கன்னி:  நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பிமுக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.  வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையைமாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.




























































































































  • துலாம்: கணவன்- மனைவிக்குள்  மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். ‌உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.







































































































  • .

























  • விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள்.நியாயத்தை பேசப் போய் பெயரைக்கெடுத்துக் கொள்ள நேரிடும்.  வியாபாரத்தில்  புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.





















































  • .





































  •  




























  • தனுசு: சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.





































































































  • மகரம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சின்னச் சின்ன சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்
































































































































  • கும்பம்:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.  நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். கனவு நனவாகும் நாள்.






























































































































  • மீனம்:  கடந்த கால இனியஅனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். புதுவேலை அமையும் .  வியாபாரத்தில் பங்குதாரர்கள் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
Comments