12.03.17- இன்றைய ராசி பலன்..(12.03.2017)

posted Mar 11, 2017, 8:25 PM by Habithas Nadaraja 
மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரம் செழிக்கும். புதுமை படைக்கும் நாள்.


ரிஷபம்:பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்கு வீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப் பார்கள். உழைப்பால் உயரும் நாள். 
 


மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகை அதிகரிக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். தைரியம் கூடும் நாள். கடகம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
கன்னி: குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். பணப் பற்றாக்குறை நீடிக்கும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். 
 துலாம்:குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ் வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள். விருச்சிகம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.தனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள். மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும் நாள்.கும்பம்: பிள்ளைகளால் மதிப்புக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத் தில் லாபம் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். மீனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

Comments