12.06.20- இன்றைய ராசி பலன்..(12.06.2020)

posted Jun 11, 2020, 6:55 PM by Habithas Nadaraja


மேஷம்:உடல் உஷ்ணத்தால் தாயாருக்குச் சில சிரமங்கள் ஏற்படக் கூடும். தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் முக்கியப் பொருட்களை கவனமாக கையாள வேண்டும். ஊர் பொது விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தின் மூலம் செலவு ஏற்படும்.\






 
ரிஷபம்:வியாபாரிகளுக்கு அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். பணியாளர்களுக்குச் சிறிய அதிருப்திகள் ஏற்படும். திடீர் செலவுகளைச் சமாளிப்பீர்கள். சண்டைபோட்ட உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.







மிதுனம்:கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதமாகவே கிடைக்கும். வியாபாரிகளின் முக்கிய முடிவுகள் எதிர்வரும் பிரச்னைகளை சரிசெய்யும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.







 கடகம்:வியாபாரத்தில் எதிர்பாராத சவால்களைச் சந்திக்க வேண்டிவரும். சகஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். பெண்கள் அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.







சிம்மம்:அலுவலகத்தில் சவாலான விஷயங்களை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். பழைய நண்பர்கள் நீண்ட நாட்களுக்கு பின்னர் தொடர்பு கொள்வார்கள். சகோதரிகளுக்கு அரசாங்க வகையில் நன்மை ஏற்படும்.







கன்னி:
பெண்கள் புதியவர்களுடன் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. புதிய வேலை தொடர்பான முயற்சியில் இருந்த இழுபறி நிலை மாறும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். வியாபாரிகளுக்கு புதிய நம்பிக்கை பிறக்கும்.







துலாம்:எதிலும் பற்றற்ற தன்மை ஏற்படும். வியாபாரிகள் இதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவர். அலுவலகத்தில் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் சேர்ந்தே உயரும். கணவர் வீடு, மனை வாங்குவது குறித்து நல்ல முடிவுக்கு வருவார்.







விருச்சிகம்:கலைத் துறையினருக்கு சற்றும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத் தலைவர்கள் வீண் செலவை குறைப்பது நல்லது. பணியாளர்களுக்கு வேலையில் திருப்தியான நிலை காணப்படும். பெண்கள் வாகன பயணத்தில் கவனம் தேவை.







தனுசு:மனதில் வீணான பிடிவாத குணத்திற்கு இடமளிப்பீர்கள். வியாபரிகள் முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் சரியான முடிவை எடுத்து சாதிப்பீர்கள். பெண்களின் முயற்சிகளில் குடும்பத்தின் பொருளாதாரத்தை அதிகப்படுத்தும் செயல்களே அதிகமாக இருக்கும்.







மகரம்:வியாபாரிகள் தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் நிறைய நன்மைகளை காண்பர். கலைஞர்களின் மனதில் புதுஉத்வேகம் பிறக்கும். பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள் சாதிப்பார்கள். பெண்கள் கணவரின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பர்.







கும்பம்:உங்களுக்கு ஞாபகமறதி தொந்தரவு அகலும். உடன்பிறந்தோரின் குடும்பப் பிரச்னைகளுக்கு உதவி செய்வீர்கள். உத்யோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றத்தினை சந்திக்க நேரலாம். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.






                                        
மீனம்:முக்கிய பிரமுகரின் மூலமாக வியாபாரரீதியான உதவிகளை பெறுவீர்கள். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அலுவலகத்தில் முக்கியமான பணிகளின் போது பிடிவாதம் செய்ய வேண்டாம். மனதில் அவ்வப்போது தத்துவம் சார்ந்த எண்ணங்கள் தோன்றும்.
Comments