மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் ஒன்றாகவும், நடப்பது வேறொன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங் கள் உண்டு. போராட்டமான நாள். ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் அறிவரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள். மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரி உதவுவார். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள். கடகம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி முக்கிய பொறுப்பை ஒப்படைப்பார். கனவு நனவாகும் நாள். சிம்மம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள். கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள். துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடிவடையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள். விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள். தனுசு: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வெளிவட்டாரத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். மகரம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். இனிமையான நாள். கும்பம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சியால் முன்னேறும் நாள். மீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித்தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர் கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். நிம்மதியான நாள் |
கலாச்சாரம் >