மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,உறவி னர்களால் ஆதாயமும் உண்டு. ஆடம்பரச்செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோ கத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள்.
ரிஷபம்:எதிர்பார்த்த காரியங்கள் முடியாவிட்டாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதா ரர்கள் ஒத்துழைப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
மிதுனம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். பெருந் தன்மையுடன் நடந்துக்கொள்ளும் நாள்.
கடகம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். ஆடை, ஆபரணம் சேரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிப டுவீர்கள். உணர்ச்சி வசப்பட்டு பேசி யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத் யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நேரமிது.
கன்னி: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களைக் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
துலாம்:எந்தப் பிரச்னையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
விருச்சிகம்:உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர் வதற்கான வழியை யோசிப் பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களால் பயன டைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.
தனுசு:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். மனநிம்மதி கிட்டும் நாள்.
மகரம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
கும்பம்:மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப் பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
மீனம்:சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவின ர்களின் பலம் பலவீனத்தை உணர் வீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். திடீர் யோகம் கிட்டும் நாள்.