[Untitled]‎ > ‎

12.08.20- இன்றைய ராசி பலன்..(12.08.2020)

posted Aug 11, 2020, 6:37 PM by Habithas Nadaraja


மேஷம்:சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணப் புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நல்லன நடக்கும் நாள்.







 
ரிஷபம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் குறையும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.








மிதுனம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வந்து நிற்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.








 கடகம்:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் புதுத் திட்டங்களை அதிகாரிகள் வரவேற்பார்கள். சிறப்பான நாள்.








சிம்மம்:புதிதாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். மதிப்பு கூடும் நாள்.







கன்னி:
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுக்கும் நாள். 









துலாம்:சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றி கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.








விருச்சிகம்:கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.








தனுசு:கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.








மகரம்:புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் உதவி கிடைக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.








கும்பம்:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனை தீர்ப்பீர்கள். கலைப் பொருட்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.







                                        
மீனம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களை தவறாக நினைத்து கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். துணிச்சலால் வெற்றி பெறும் நாள்.
Comments