13.0.17- இன்றைய ராசி பலன்..(13.10.2017)

posted Oct 12, 2017, 6:48 PM by Habithas Nadaraja
மேஷம்:முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பாராத உதவிகிட்டும் நாள்.ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.மிதுனம்:காலை 5.42 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து போகும். கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். முகப்பொலிவு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்களுடன் இருந்த மனவருத்தம் விலகும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.  


கடகம்: காலை 5.42 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். சிலர் உங்களை குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மறை முக விமர்சனங்கள் உண்டு. எதிர்பார்ப்பு கள் தாமதமாகி முடியும் நாள்.  


சிம்மம்:  சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். அண்டை, அயலார் சிலரின் செயல் பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.  கன்னி:ஆன்மிகப் பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். நெடு நாட்களாக பார்க்க நினைத்த  ஒருவர் உங்களைத் தேடிவருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்பு கூடும் நாள்.துலாம்:உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்கள் உதவுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள். விருச்சிகம்:காலை 5.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப் பட வேண்டாம். நண்பகல் முதல் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத் தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள். 


தனுசு: காலை 5.42 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப் பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடு வதால் வீண் பழிச்சொல் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்து வது நல்லது. போராட்டமான நாள். 


மகரம்:  உங்கள் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.கும்பம்:புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.  


                                        

மீனம்:குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.
Comments