posted Mar 12, 2021, 6:03 PM by Habithas Nadaraja
 தனுசு:சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.முயற்சியால் முன்னேறும் நாள்.
 மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளி ஊரில் இருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். தாய் வழி உறவினரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
 கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள்பார்வையிலேயே முடிப்பது நல்லது.யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் உங்களை பற்றிய வதந்திகள் வந்து போகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
 மீனம்:மறைமுக விமர்சனங்களும் எதிர்காலம் பற்றிய பயமும் வந்துநீங்கும். வாகனத்தில் சாலைகளைக்கடக்கும் போகும் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம்ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.
|
|