13.07.17- இன்றைய ராசி பலன்..(13.07.2017)

posted Jul 12, 2017, 7:08 PM by Habithas Nadaraja
 மேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். செல்வாக்குக் கூடும் நாள்.ரிஷபம்: சொன்ன சொல்லைகாப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.மிதுனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மகிழ்ச்சி தங்கும் நாள்.கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரி களால் அலைகழிக்கப்படுவீர்கள். அலைச் சல் அதிகரிக்கும் நாள்.சிம்மம்: திட்டமிட்ட சில வேலைகளை செய்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள் திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தொட்ட காரியம் துலங்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
துலாம்பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள், நினைத்தது நிறைவேறும் நாள்.விருச்சிகம்: உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் வீண் விவாதம் வந்து நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.தனுசு: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு கலைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.


மகரம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். ஆடை, ஆபரணம் சேரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போங்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி எந்த முதலீடும் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


                                        

மீனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச் சல் அதிகரிக்கும். உறவி னர்கள், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
Comments