[Untitled]‎ > ‎

13.07.20- இன்றைய ராசி பலன்..(13.07.2020)

posted Jul 12, 2020, 9:20 PM by Habithas Nadaraja


மேஷம்:திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். பகல் 11.14 மணி முதல் ராசிக்குள் சந்திரன் வருவதால் பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.






 
ரிஷபம்:எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பகல் 11.14 முதல் விரயத்தில் சந்திரன் வருவதால் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.








மிதுனம்:சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். எதிலும் வெற்றி பெறும் நாள்.







 கடகம்:குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.








சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். செலவினங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். பகல் 11 . 14 மேல் மணிக்கு மாற்றங்கள் ஏற்படும் நாள்.







கன்னி:
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். பகல் 11.14 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.







துலாம்:எதிர்பாராத பண வரவு உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தால் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது  துலங்கும் நாள்.









விருச்சிகம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.









தனுசு:பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது  வேலை கிடைக்கும். மகளுக்கு மனதிற்கு பிடித்த வரன் அமையும்.  வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.







மகரம்:குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனவசதி பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.







கும்பம்:கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.







                                        
மீனம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பகல் 11.14 மணி முதல் நல்ல மாற்றங்கள் ஏற்படும் நாள்.
Comments