13.08.19- இன்றைய ராசி பலன்..(13.08.2019)

posted Aug 12, 2019, 7:04 PM by Habithas Nadaraja


மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீடு, வாகனத்தை மாற்றி அமைப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.  உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதித்துக் காட்டும் நாள்.ரிஷபம்:காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துச்செல்லும். பணவரவு திருப்தி தரும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூ லாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.மிதுனம்:காலை 11 மணி முதல்சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். பதறாமல் பக்கு வமாக செயல்பட வேண்டிய நாள்.


கடகம்:சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.


சிம்மம்:எதிர்பார்த்த பணம் கைக்கு  வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.கன்னி:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களைகண்டறிவீர்கள். ஆடம்பரச்செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.  


துலாம்:தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். விருந்தினர் வருகைஉண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில்மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.விருச்சிகம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்று வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


தனுசு:காலை 11 மணி வரைராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு விலகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக் கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனசாட்சிப் படி செயல்படும் நாள்.


மகரம்:காலை 11 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.கும்பம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். யாரையும்தூக்கி எறிந்து பேசாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.


                                        
மீனம்:ஆர்வமிகுதியால் கவித்துவமாக பேசுவீர்கள். எதிரியால் இருந்த தொல்லை குறையும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். நிலுவைப்பணம் வசூலாகும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.
Comments