[Untitled]‎ > ‎

13.11.19- இன்றைய ராசி பலன்..(13.11.2019)

posted Nov 12, 2019, 5:00 PM by Habithas Nadaraja


மேஷம்: கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இதுவரை இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். நீண்ட நாளாக இருந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.







ரிஷபம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாத படிவேலைச்சுமை இருக்கும். குடும்பத்தாருடன் இனக்கமாக செல்வது நல்லது. சிலரின் தவறை சுட்டிக்காட்டுவதான் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல் படவேண்டிய நாள்.







மிதுனம்:சில காரியங்களை அலைந்து, திறிந்து முடிக்க வேண்டிவரும். உடன் பிறந்தவர்களால், அலைச்சல் வீண் செலவுகள் வந்துபோகும். மருத்துவச் செலவுகள் உண்டு. தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம் . பொறுமையை கடைபிடிக்கும் நாள்.







கடகம்:கிடைக்கும் அனைத்து வாய்ப்புக்களையும் . சந்தர்ப்பங்ளையும் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவீர்கள். உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் எண்ணங்கள் நிறைவேற வேண்டிய முயற்சிகளை செய்வீர்கள். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். மகிழ்ச்சி  ஏற்படுத்தும் நாள்.






சிம்மம்:எந்த விஷயத்திலும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு முன்னேறுவீர்கள்.  உறவினர்கள், நண்பர்கள்  உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்புக் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.







கன்னி:இதுவரை இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்பு ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் நிலவும். மனசாட்சி படி செயல்படும் நாள்.







துலாம்:சந்திராஷ்டமம் தொடங்கி இருப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். உங்களுடைய சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டாம். சாலைகளை கவனமாகக் கடந்து செல்லுங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளும், நெருக்கடிகளும் வந்து நீங்கும். கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நாள்.







விருச்சிகம்:கல்யாண முயற்சிகள் பலிதமாகும். கணவன், மனைவிக்குள் அன்நியோன்னியம் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை வங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முககிய அறிவுரைகளை தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.







தனுசு:அரசால் அனுகூலம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். தேவையான பணப்புழக்கம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு.  உத்தி யோகத்தில் உங்கள் செயல்களால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வெற்றி பெறும் நாள்.







மகரம்: வருங்கால திட்டத்தில் ஒன்றை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து பாராட்டுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.







கும்பம்:பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகும் நாள்.






                                        
மீனம்:துணிச்சலாக முடிவெடுத்து அதனைச் செயல்படுத்தி வெற்றிபெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள்  உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதிகாரபதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் தலைமை உங்களுக்கு நெருக்கமாவார். முயற்சியால் முன்னேறும் நாள்.
Comments