[Untitled]‎ > ‎

13.11.21- இன்றைய ராசி பலன்..(13.11.2021)

posted Nov 12, 2021, 5:45 PM by Habithas Nadaraja
  • மேஷம்:  குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.  மாறுபட்ட  அணுகு முறையால் சாதிக்கும் நாள்.

























































































  • ரிஷபம்: பிரச்சினைகளின் ஆணி வேரைக் கண்டறிவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.





































  • .




































  • மிதுனம்:குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.







































































































  • கடகம்:சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.













  • சிம்மம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.  தாயாரின் உடல் நிலை சீராகும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.



















  • கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

























































































  • துலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.








































































  • .

























  • விருச்சிகம்:எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

















  • .





































  •  




























  • தனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். உத்தியோகத்தில் உங்கள்உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.













































































  • மகரம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அழகும் இளமையும் கூடும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.




























































































  • கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சிலர் உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள்.  உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.

































































































  • மீனம்:குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிஉணவுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
Comments