[Untitled]‎ > ‎

13.12.19- இன்றைய ராசி பலன்..(13.12.2019)

posted Dec 12, 2019, 5:35 PM by Habithas Nadaraja


மேஷம்: எந்த விஷயத்திலும் தன்னிச்சையாக முடிவெடுத்து சிறப்பாக செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன பழுதை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களுக்கு நெருக்கமாவார். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.








ரிஷபம்:கடந்த இரண்டு, மூன்று நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த விஷயங்கள் உடனே முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சி தங்கும் நாள்.






மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். கணவன், மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச்செல்லும். உடல் நலம் பாதிக்கும்.  உத்தியோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். விளைந்து கொடுக்க வேண்டிய நாள்.







கடகம்:வேலையை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்சினைகள் வந்து செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.







சிம்மம்:எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். சுற்றத்தார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புதிய சூட்சமங்களை கற்று கொள்வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் சிறப்பான நாள்.







கன்னி:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியமும், திறமையும் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள்.







துலாம்: கடந்த இரண்டு மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள்  பிறக்கும்.  வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.







விருச்சிகம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் பணிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.







தனுசு:சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.







மகரம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்குகள் சாதகமாக மாறும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் திறமையைக் கண்டு வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.







கும்பம்:வருமானத்திற்கு தேவையான புதிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.நண்பர்கள் சாதகமாக செயல்படுவார்கள். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதுமை படைக்கும் நாள்.






                                        
மீனம்:எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப்போனாலும், எதிர் பாராத விஷயங்கள் இன்று முடியும். தாயாருடன் மனகசப்புகள் ஏற்படும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிக்க வேண்டியது  இருக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
Comments