14.01.18- இன்றைய ராசி பலன்..(14.01.2018)

posted Jan 13, 2018, 5:56 PM by Habithas Nadaraja
மேஷம்:குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத் தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். தார்த்தமாக பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண் டாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

மிதுனம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார் கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.சிம்மம்:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கடையை விரிவு படுத்துவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.கன்னி:எதிர்ப்புகள் அடங்கும். தாய் வழி உறவினர்களால் செலவுகள் வந்து போகும். வர வேண்டிய பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.துலாம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள் வார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். வெற்றி பெறும் நாள்.விருச்சிகம்:இங்கிதமாகப் பேசி கடினமான காரியங் களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். முகப்பொலிவு கூடும். உறவினர்கள் உதவுவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.மகரம்:குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துபோகும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டி களை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.கும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு கிட்டும்.வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


                                        

மீனம்:உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
Comments