[Untitled]‎ > ‎

14.01.22- இன்றைய ராசி பலன்..(14.01.2022)

posted Jan 13, 2022, 4:40 PM by Habithas Nadaraja
  • மேஷம்:இதுவரை கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.











































































































  • ரிஷபம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். வியாபா ரத்தில் கடன் தர வேண்டாம். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலை யுண்டு என்றிருப்பது நல்லது.  சிக்கனம் தேவைப் படும் நாள்.


























































  • .




































  • மிதுனம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். சகோதரர்களை பகைத்து கொள்ளாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.


































































































































  • கடகம்:இன்று உங்கள் எதிராளிகளைத் திணறடிக்கும் வகையில் செயல்படுவீர்கள். தேக ஆரோக்கியம் சுமூகமாக இருக்கும். கடன் சுமை குறையும். வழக்குகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் வரும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நலம். நீங்கள் எதிர்பார்த்த நல்ல தகவல் ஒன்று வரும்.


















  • சிம்மம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதித்துக் காட்டும் நாள்.



























  • கன்னி:  இதுவரை இருந்த பிரச்னைகள் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும் பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் எல்லாம் மீண்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.



















































































































  • துலாம்:சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். குடும்பத்தில் எல்லா வற்றையும் நீங்கள் இழுத்துப்போட்டுப் பார்க்க வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் பணிப்போர் வந்து நீங்கும்.  போராட்டமான நாள்.

































































































  • .

























  • விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிகழும். திறமைகள் வெளிப்படும் நாள்.









































  • .





































  •  




























  • தனுசு: பணப் புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. விருந்தினர் வருகையால் வீடுகளைகட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக் கையை ஏற்பர். திடீர் யோகம் கிட்டும் நாள்.



























































































  • மகரம்:  குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில்  சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நல்லது நடக்கும் நாள்.



    .






















































































































  • கும்பம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும்.தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

























































































































  • மீனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அனைத்தையும் முடித்துக் காட்டுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
Comments