posted Mar 13, 2021, 7:51 PM by Habithas Nadaraja
 தனுசு:பால்ய நண்பர்களில் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
 மகரம்: தைரியமாக சில முக்கியமுடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்
 கும்பம்: கடந்த இரண்டு நாட்களாகஇருந்த அலைச்சல் டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும்.எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில்புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். மாற்றம் ஏற்படும் நாள்.
 மீனம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.
|
|