14.04.18- விளம்பி புதுவருடம் 14ஆம் திகதி காலை7மணிக்கு உதயம்..

posted Apr 14, 2018, 1:04 AM by Habithas Nadaraja
தமிழர்களின்  60வருட சுற்றுவட்டத்தில் 32ஆவது வருடமான விளம்பி தமிழ்ப்புத்தாண்டு 14ஆம் திகதி பிறக்கின்றது.
14.04.2018 (சித்திரை 01)  சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு புதிய  'விளம்பி' என்னும் பெயருடைய தமிழ்ப்புத்தாண்டு உதயமாகின்றது.

'விளம்பி' வருஷத்தில் யாவற்றையும் சீர் தூக்கி கண்ட நற்பலன் மூன்றும்  தீயபலன் இரண்டு பங்கு என்று பஞ்சாங்கம் கூறுகின்றது.

 14.04.2018 சனிக்கிழமை அதிகாலை 3.00 மணி முதல் சனிக்கிழமை 11.00 (மு.ப) மணி வரை விஷு புண்ணிய காலமாகும். இப்புண்ணிய காலத்திற்குள் யாவரும் விதிப்படி சங்கற்பித்து    மருத்து நீர் தேய்த்தல்  வேண்டும்.சிரசில் கொன்றையிலையும்  காலில் ஆலிலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து  ஸ்நானம்  செய்தல். மருத்து  நீரை கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று பெற்றோர். குரு பெரியோர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் சிறப்பானது.

சங்கிரம தோஷ நட்சத்திரங்களாக பூசம்- மகம்- பூரம்- உத்தரம் 1ம் கால் அனுஷம்- பூரட்டாதி 4ம் கால்- உத்தரட்டாதி- ரேவதி . இவற்றிற்        பிறந்தோர்  தவறாது மருத்து நீர் தேய்த்துஸ்நானம் செய்துஇயன்ற தான தருமங்களைச் செய்து சங்கிரமதோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டும்.

விளம்பி வருடத்திற்கான ஆடையாக   சிவப்பு நிறமுள்ள பட்டாடைஅல்லது சிவப்பு கறுப்பு  கரையமைந்த பட்டாடையாகும். ஆபரணமாக பவளம் நீலக்கல் இழைத்த ஆபரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரை மாதம் 1ம் திகதி சனிக்கிழமை (14.04.2018) காலை சூரியனுக்குப் பொங்கல் பூசைகள் செய்து வழிபாடுகள் செய்தல் பொருத்தமாகும்.அறுசுவை ணவுடன்வேப்பம் பூ பிட்டு சேர்த்து அருந்தல். 

புண்ணியகால நற்கருமங்களாக வழமையாக சிரசில் தேய்க்கும் எண்ணைய்யில் சிரசில் சிறிதளவு தேய்த்துக் கொள்ளல்.சுகந்த சந்தணம் பூசி நறுமலர் சூடல்.இஷ்ட குலதெய்வ வழிபாடு செய்து ஆலயங்களில் நடைபெறும் விசேட பூசை வழிபாடுகளில் கலந்து கொள்ளல்.
கண்ணாடி தீபம்நிறைகுடம் தனது வலக்கை வழிபடும் தேவதையின் திருவுருவம் திருமுறைப் புத்தகம் தாமரை முதலிய பூக்கள் பழவகை விபூதி சந்தணம் குங்குமம் வெற்றிலை பாக்கு முதலிய மங்கலப் பொருட்களில் முக தரிசனம் செய்து மகிழ்தல்.
பெற்றோர் குரு பெரியவர்களை வணங்கி ஆசிபெறல்.

உற்றார் உறவினர் நண்பர்களுடன் அளவளாவி வாழ்த்துக்கள் தெரிவித்து போஜனம் மேற்கொண்டுதாம்பூலம் அருந்தி மகிழ்தல்.புதிய வருஷ பலாபலன்களை வாசித்தும்- கேட்டும் நன்குணர்ந்து புதிய வருஷத்தில் ஆற்றக் கூடிய நற்கருமங்களைச் சிந்தித்தும் அரிய தவத்தாற் பெற்ற மானிடப்பிறவியில் செயற்பாலனவற்றை இனிது நிறைவேற்றி மங்கள கரமாக வாழ்வோமாக.
கைவிசேஷத்திற்குப்பொருத்தமான நேரம் 4 குறிப்பிடப்பட்டுள்ளது.

(சித்திரை -01) 14.04.2018 சனி பகல் மணி 12.15 முதல் பி.ப மணி 2.10 வரை(சித்திரை -01) 14.04.2018 சனி மாலை மணி 6.21 முதல் இரவு மணி 8.13 வரை(சித்திரை -03) 16.04.2018 திங்கள் பகல் மணி 12.30 முதல் பிற்பகல் மணி 2.02 வரை(சித்திரை -03) 16.04.2018 திங்கள் மாலை மணி 06.13 முதல் இரவு மணி 7.24 வரை 

விசு புண்ணியகாலத்திலும் கைவிசேசம் செய்து கொள்ளலாம்.

                                                      ஆதாய வியயம்
இராசி                       ஆதாயம்      வியயம்         பலன்
மேடம் விருச்சிகம்   02               14              பெருநஷ்டம்
இடபம் துலாம்           11               05              இலாபம்
மிதுனம்.கன்னி           14               02              அதிக இலாபம்
கர்க்;கடகம்.                   14               08              இலாபம்
சிங்கம் (சிம்மம்)           11               11              சமசுகம்
தனுஇ மீனம்           05               05              சமசுகம்
மகரம் கும்பம்           08              14              நஸ்டம்

மழை மரக்கால் இரண்டு பலன் :- சமமழை மத்திம விளைவு அகவிலை சமம் வெப்ப மிகுதி உண்டாம்.

விளம்பி வருஷ கிரகணங்களைப்பொறுத்தவரை  இவ்வருடம் மூன்று பார்சூவ சூரிய கிரகணங்களும் இரு பூரணசந்திர கிரகணங்களும் நிகழவுள்ளன. மூன்று பார்சுவ கிரகணங்களும் ஒரு பூரண சந்திர கிரகணமும் இலங்கையில் தோற்றாது.பூரண சந்திர கிரகணம் ஒன்று மட்டும் இலங்கையில் தோற்றும் 27.07.2018(வெள்ளிக்கிமை) பூரண சந்திர கிரகணம் இரவு 11.54 பின் இரவு 3.49 கார்த்திகை ரோகிணி மிருகசீரிடம் 34ம் கால்கள்- திருவாதிரை புனர்பூசம்123ம் கால்கள் உத்தரம் அத்தம் உத்தராடம்   திருவோணம் 
அவிட்டம்12ம் கால்கள் என்பன தோச நட்சத்திரங்களாகும்.

காரைதீவு நிருபர் 


Comments