[Untitled]‎ > ‎

14.05.18- இன்றைய ராசி பலன்..(14.05.2018)

posted May 13, 2018, 6:17 PM by Habithas Nadaraja   [ updated May 13, 2018, 6:19 PM ]




மேஷம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.







ரிஷபம்:கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.







மிதுனம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சிறப்பான நாள்.






கடகம்:உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. உங்களை தவறாக நினைத்து கொண்டிருந்தவர்கள் சிலரின் மனசு மாறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.







சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.






கன்னி:சந்திராஷ்டமம் நீடிப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.






துலாம்:சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.







விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்க்ள. சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.








தனுசு:புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து மிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.





மகரம்:எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.







கும்பம்:சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவு செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.





                                        

மீனம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
Comments