14.06.17- இன்றைய ராசி பலன்..(13.06.2017)

posted Jun 13, 2017, 6:38 PM by Habithas Nadaraja
 மேஷம்: உங்கள் அணுகு முறையை மாற்றிக்கொள்வீர்கள். உடன்பிறந்த வர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். 
வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப் படுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.  


ரிஷபம்:  தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். உற்சாகமான நாள்.   மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரே முயற்சி யில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள். 


கடகம்: பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். போராடி வெல்லும் நாள். சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நாடி வந்தவர் களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து சுபச் செய்திகள் வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியா பாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.  துலாம்புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கல்யாண முயற்சி கள் பலிதமாகும். வெளிவட்டாரத் தொடர் புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். விருச்சிகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பள்ளிப் பருவ உறவுகளை சந்திப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள். தனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நட்பு வட்டம் விரியும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.மகரம்:  ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய பிரச்னைகள் தலைத் தூக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். சிக்கனமாக இருங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள். கும்பம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போங்கள். பழைய கசப்பான சம்பவங் களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


                                        

மீனம்:  கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமை களை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.        
Comments