14.08.16- இன்றைய ராசி பலன்..(14.09.2016)

posted Sep 13, 2016, 5:40 PM by Habithas Nadaraja
மேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள்.அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமா கும் நாள். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள்.அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமா கும் நாள். 


ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவர்கள் நண்பர்களா வார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.   


மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட் படுவீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். அநா வசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். 


கடகம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக் கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர் கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக் கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர் கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள். 


சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களின் திறமையை உணர்ந்துக் கொள்வார். அமோகமான நாள். 


கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.    


துலாம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தாய்வழி உறவி னர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். 


விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.  


தனுசு: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பணம் கிட்டும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். ஆடை, ஆப ரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.   


மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய அலு வல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பா ர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோ கத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள். 


கும்பம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள், செல வுகளால் திணறுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். 

மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் பாச மழைப்பொழிவார்கள். உங்களால் பயனடைந் தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக் கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.Comments