14.09.17- இன்றைய ராசி பலன்..(14.09.2017)

posted Sep 13, 2017, 6:34 PM by Habithas Nadaraja




 மேஷம்:  குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.







ரிஷபம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.







மிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.







கடகம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். எதிர்பாராத பயணங்கள், வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.




சிம்மம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.








கன்னி:கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.






துலாம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.







விருச்சிகம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.







தனுசு:  கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.







மகரம்: இன்றையதினம் சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுவீர்கள். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.







கும்பம்:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புதுமை படைக்கும் நாள். 






                                        

மீனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். எதிர்பார்புகள் பூர்த்தியாகும் நாள்.
Comments