[Untitled]‎ > ‎

14.10.18- இன்றைய ராசி பலன்..(14.10.2018)

posted Oct 13, 2018, 8:31 PM by Habithas Nadaraja



மேஷம்: மாலை 4.30 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள் யோகா,தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள். 







ரிஷபம்:கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப்போகும். புது நட்பு மலரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 4.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கு வதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள். 







மிதுனம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவிகேட்டு வருபவர்களுக்கு உங்களாலான வற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை மேலதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.  






கடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.  







சிம்மம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 







கன்னி: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.







துலாம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக்கிட்டும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.







விருச்சிகம்: மாலை 4.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள்.மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலை யிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.





தனுசு:குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்துப்போகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாலை 4.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானித்து செயல்பட வேண்டிய நாள். 







மகரம்:குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். நம்பிக்கைக்குரியவரை கலந்தா லோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெருவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சிறப்பான நாள். 







கும்பம்:சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுதுசந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள். 






                                        
மீனம்:  உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளின் கோரிக் கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.
Comments