[Untitled]‎ > ‎

14.11.21- இன்றைய ராசி பலன்..(14.11.2021)

posted Nov 13, 2021, 6:06 PM by Habithas Nadaraja
  • மேஷம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

























































































  • ரிஷபம்: சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள் பெற்றோரின் ஆதரவு பெருகும் நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள் .வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள் உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.





































  • .




































  • மிதுனம்:கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சிலர் உங்களை நம்பிமுக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.







































































































  • கடகம்:குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.













  • சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.



















  • கன்னி: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


























































































  • துலாம்: பணவரவு திருப்திகரமாக அமையும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.








































































  • .

























  • விருச்சிகம்:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

    .

















  • .





































  •  




























  • தனுசு:  பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.













































































  • மகரம்:துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை  ஏற்பீர்கள். வெற்றி பெறும் நாள்.





























































































  • கும்பம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். விலகிநின்றவர்கள் விரும்பி வருவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.

































































































  • மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம்  கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள்.  மற்றவர்கள் விஷயத்தில் அனாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
Comments