[Untitled]‎ > ‎

14.12.18- இன்றைய ராசி பலன்..(14.12.2018)

posted Dec 13, 2018, 4:48 PM by Habithas Nadarajaமேஷம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.
ரிஷபம்:தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சியால் முன்னே றும் நாள்.
மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

        


கடகம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.சிம்மம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.
கன்னி:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
துலாம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
விருச்சிகம்:எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர் களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
தனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படு வீர்கள். வெற்றி பெறும் நாள்.
மகரம்:குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
கும்பம்:  ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்க வும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


                                        
மீனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட் களை கவனமாக கையாளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோ கத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
Comments