14.12.19- இன்றைய ராசி பலன்..(14.12.2019)

posted Dec 13, 2019, 6:27 PM by Habithas Nadaraja


மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சொந்த, பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள்.  உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கான பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.
ரிஷபம்:குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு, மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வுகாண் பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். புதிய நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். நிம்மதி கிட்டும் நாள்.


மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே மூச்சில் முடிக்க வேண்டிய விஷயங்களைப் பலமுறை அலைந்து திரித்து முடிக்க வேண்டி இருக்கும். உங்களின் அணுகுமுறையில், சில மாற்றங்களை ஏற்படுத்துங்கள். வியாபாரத்தில் லாபம் பெற போராட வேண்டி இருக்கும். திட்டமிட்டு விழிப்புடன் செயல்படுவதால் முன்னேறமுடியும். வெற்றி பெறும் நாள்.


கடகம்:கணவன் மனைவிக்குள், இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மற்றவர்களுக்காக, ஜாமின் போன்ற விஷயங்களில் தலையிடவேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் லாபம் பெற கடினமாகப் போராடுவீர்கள். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.சிம்மம்:குடும்பத்துடன் மனம் விட்டு பேசிமகிழ்வீர்கள். பிரியமானவர்களுடன் சந்திப்பு நிகழும். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியா பாரத்தில் வாடிக்கையாளர்களால் திருப்தி அடைவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின், ஆதரவு கிடைக்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.கன்னி:எந்த காரியத்திலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிபெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்ற மதத்தவர்கள் அறிமுகமாவார்கள். பயணங்களால், மகிழ்ச்சி ஏற்படும். புதிய தொழில் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இனிமையான நாள்.துலாம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். மாற்றங்கள் நிறைந்த நாள்.விருச்சிகம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் , அறிவுப் பூர்வமாக முடிவெடுத்து செயல்படுவீர்கள். முன் கோபத்தை குறையுங்கள். உங்களின் பலம், பலவீனம்  அறிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.
தனுசு


தனுசு:குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். கணவன், மனைவியிடையே அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் வெற்றியடையும். வீட்டிற்கு தேவையான செயல்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நல்லது நடக்கும் நாள்.மகரம்:சாமர்த்தியமாகப் பேசி உங்கள் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமையை மற்றவர்களிடம் சொல்லி பெருமைப்படுவீர்கள். நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில  மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் , சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாள்.


கும்பம்: எந்த காரியத்திலும் திட்டமிட்டு செயல்பட்டு  வெற்றி பெற நினைப்பீர்கள். உறவினர்கள், எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். கடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வழிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


                                        
மீனம்:எதிர்ப்புக்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வெளிவட்டாரத்தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் அதிரடி சலுகையால் லாபம்அடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை முடிக்கப் போராடுவீர்கள். எதிர் பாராத உதவிகிட்டும் நாள்
Comments