[Untitled]‎ > ‎

15.01.17- இன்றைய ராசி பலன்..(15.01.2017)

posted Jan 14, 2017, 5:44 PM by Habithas Nadaraja



 

மேஷம்: குடும்ப விஷயத்தை பிறரிடம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திக்க நேரிடலாம். பிராணிகளிடம் இருந்து விலகி இருக்கவும்.





ரிஷபம்: நண்பரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். விருந்து விழாவில் பங்கேற்க அழைப்பு வரும்.







மிதுனம்: குடும்ப விஷயத்தை பிறரிடம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திக்க நேரிடலாம். பிராணிகளிடம் இருந்து விலகி இருக்கவும்.







கடகம்: சிலரது பேச்சு மன சங்கடத்திற்கு ஆளாக்கலாம். தொழில் வியாபாரத்தில் சராசரி பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் உண்டாகும். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.







சிம்மம்: பணியில் பொறுப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் மூலதனம் அதிகம் தேவைப்படும். லாபம் படிப்படியாக உயரும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் கண்ணும் கருத்துமாகப் படிப்பர்.









கன்னி: சுயநலத்துடன் சிலர் உங்களுக்கு உதவ முன்வருவர். தொழில், வியாபாரத்தில் சுமாரான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்தித்தாலும் வருமானம் கிடைக்கப் பெறுவர். பெண்கள் தாய் வீட்டாரின் ஆதரவைப் பெறுவர். உடல்நலனில் கவனம் தேவை.





துலாம்அவமதித்தவரும் இணக்கமுடன் நெருங்கி வருவர். தொழில் வியாபார வளர்ச்சியால், வருமானம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.







விருச்சிகம்: குடும்ப பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். ஆதாயம் உயரும். உறவினரின் தேவையறிந்து உதவுவீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.








தனுசு:மனைவியின் ஆலோசனையை ஏற்பது நல்லது. எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும்.








மகரம்: மற்றவர் விமர்சனத்தைப் பொருட்படுத்த வேண்டாம். தொழில் வியாபாரத்தில் குறுக்கிடும் தடைகளைச் சரி செய்வீர்கள். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.





கும்பம்: உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் விரும்பிய சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.








மீனம்: மனதில் புத்துணர்ச்சி மேலோங்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். அரசு வகையில் நன்மை கிடைக்க வாய்ப்புண்டு.

Comments