[Untitled]‎ > ‎

15.01.19- இன்றைய ராசி பலன்..(15.01.2019)

posted Jan 14, 2019, 5:45 PM by Habithas Nadarajaமேஷம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் எடுத்த வேலை யையும் முழுமையாக முடிக்கமுடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உங்கள் மீது சிலர்வீண்பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் சூட்சு மங்களை உணருவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.   ரிஷபம்:எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்துப் போகும்.எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும்.வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப் புகள் அதிகரிக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.  மிதுனம்:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வெளியூர் பயணங்களால்மகிழ்ச்சி தங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.சிந்தனைத் திறன் பெருகும் நாள். கடகம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம்உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தரு வார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.  


சிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர் பாராத இடத்திலிருந்து உதவி கள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல்செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப் பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.  கன்னி: சந்திராஷ்டமம் தொடர் வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம்பேசி சிக்கிக் கொள்ளா தீர்கள். மற்றவர்களுக்காகஉதவி செய்யப் போய் உபத்திரவத்தில்சிக்கிக் கொள்ளாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில்விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.  துலாம்:மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். விருச்சிகம்:எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.தனுசு:மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள் உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறி வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள். மகரம்:பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில்சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதிகிட்டும். உழைப்பால் உயரும் நாள்.  கும்பம்:குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப்பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். பெருந்தன் மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.  


                                        
மீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்குவரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். உறவினர், நண்பர்கள் வீடு தேடிவருவார்கள். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். 
Comments