[Untitled]‎ > ‎

15.04.21- இன்றைய ராசி பலன்..(15.04.2021)

posted Apr 14, 2021, 6:18 PM by Habithas Nadaraja
  • மேஷம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும் .நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பாதியில் நின்ற  வேலைகள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


















  • ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பணிப்போர் வந்து நீங்கும். வளைந்துக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
















  • மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினை வந்து விலகும். கவனம் தேவைப்படும் நாள்.























  • கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். நம்பிக்கைக்குரியவர் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.  உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.

  • சிம்மம்:கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.



  • கன்னி: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இழந்த உரிமைகள் பெறுவீர்கள்.  திட்டங்கள் நிறைவேறும் நாள்.





















  • துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். போராட்டமான நாள்.


























  • விருச்சிகம்: கணவன் – மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.














  • தனுசு:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.





















  • மகரம்:புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குங்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

























  • கும்பம்:முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.




















  • மீனம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.
Comments