15.06.20- இன்றைய ராசி பலன்..(15.06.2020)

posted Jun 14, 2020, 6:11 PM by Habithas Nadaraja


மேஷம்:தொழில் சம்பந்தமாக வெளிநாட்டு தொடர்பு ஏற்படும். பொருளாதாரம் முன்பைவிட நன்றாக இருக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொள்வர். வியாபாரிகளுக்கு பணவரவு அதிகரிப்பதால் மனதில் மகிழ்ச்சி கூடும்.


 
ரிஷபம்:உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பர். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். பெண்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்களிடமிருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு மனதில் இருந்த கவலைகள் தீரும்.மிதுனம்:உத்யோகத்தில் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். பெண்கள் புகுந்த வீட்டின் பெருமையை பாதுகாப்பர். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய இடர்கள் ஏற்பட்டு விலகும். கலைஞர்கள் எதிரிகளைச் சமாளிப்பர். கடகம்:எதிரிகள் என்று நினைத்தவர்கள் நட்புக்கரம் நீட்டுவார்கள். அலுவலக விஷயங்களை அடுத்தவரிடம் பகிர வேண்டாம். உறவினர்களுக்கு இயன்ற அளவில் உதவி செய்வீர்கள். தொழில் செய்பவர்களுக்கு இயந்திரங்கள் பழுதாவதால் தொல்லை ஏற்படக்கூடும்.சிம்மம்:எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சில சிறிய சிக்கல்கள் ஏற்படக்கூடும். பெண்களுக்கு பேச்சில் நிதானம் தேவை. பணியாளர்கள் நினைத்ததைச் செய்ய முடியாமல் மனக்கவலை அடைவர்.கன்னி:
புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சிறிய அளவில் காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவால் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவீர்கள்.துலாம்:வரவேண்டிய கடன் தொகைகள் கைக்கு வந்து சேரும். வியாபாரிகள் புது ஏஜென்சி எடுத்து நடத்துவர். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு திடீர் திருப்பங்கள் உண்டு. பெண்களுக்கு அலங்காரத்தில் நாட்டம் ஏற்படுவதால் அழகும், இளமையும் கூடும்.விருச்சிகம்:விலகிச் சென்ற உறவினர்கள் சுயநலம் காரணமாக வலிய வந்து பேசுவார்கள். வியாபாரிகளுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதால் மனஉளைச்சலுக்கு ஆளாவர். உத்தியோக ரீதியான வெளிநாட்டுத் தொடர்பால் அனுகூலம் கிடைக்கும்.தனுசு:பூர்வ சொத்துக்களால் அலைச்சல் ஏற்படலாம். பணியாளர்களுக்கு சாதனை காரணமாக மகிழ்ச்சி ஏற்படும். தொழிலில் இத்தனை காலம் எதிரிகளாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். கலைஞர்களுக்கு பெரிய மனிதர்களுடைய அறிமுகம் கிடைக்கும்.மகரம்:புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு பணவரவு சீரான அளவில் கிடைக்கும். சுபநிகழ்ச்சி பற்றிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு உடன் பிறந்தவர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காது.கும்பம்:பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். எலக்ட்ரானிக் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதை எளிதாக சமாளிப்பீர்கள்.


                                        
மீனம்முன்னேற்றப் பாதையில் அடிஎடுத்து வைப்பீர்கள். பெண்களின் புதிய திட்டங்கள் தாமதமாகும். பிள்ளைகளின் உடல் நலனில் கூடுதல் கவனம் வேண்டும். அலுவலகப் பணியாளர்கள் நன்மையடைவர். வியாபாரிகளுக்கு தனவரவு திருப்தி தரும்.
Comments